திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (12:30 IST)

படங்களை பத்தின சர்ச்சை கருத்துகள் வேண்டாம்! – பாஜகவினருக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!

Pm Modi Sad
சமீபமாக பதான் திரைப்படம் குறித்து பாஜகவினர் சிலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் பிரதமர் மோடி திரைப்படங்கள் குறித்து பேச வேண்டாம் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடித்து ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள படம் பதான். இந்த படத்தின் பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி உடை அணிந்திருந்தது இந்து மத ஆர்வலர்களிடையே சர்ச்சையை உண்டு பண்ணியது. அதை தொடர்ந்து பதான் படத்தை திரையிடக்கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பல மாநிலங்களில் மாநில பாஜக பிரமுகர்கள் சிலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பாஜக தலைவர்கள் திரைப்படங்கள் குறித்த கருத்துகளை பேச வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திரைப்பட சர்ச்சைகள் குறித்து பாஜக தலைவர்கள் பேசுவதால் அரசின் திட்டங்கள் மக்களிடையே சென்றடையாமல் இருப்பதாகவும், தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் இந்த சர்ச்சையே ஒளிபரப்பாகி வருவதாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கு 400 நாட்களே உள்ள நிலையில் மத்திய அமைச்சர்களின் உழைப்பை வீணடிக்கும் வகையில் இந்த வீண் விவாதம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K