புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (13:00 IST)

பீட்சா டெலிவரி செய்த இளைஞருக்கு கொரோனா பாசிட்டிவ்: 72 குடும்பங்கள் தனிமை

டெல்லியில் பீட்சா டெலிவரி செய்யும் 19 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் பீட்சா டெலிவரி செய்த 72 வீடுகளில் உள்ள குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டெல்லியின் தெற்கு பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி இருந்தது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த இளைஞருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது உறுதியாகியது
 
இதனை அடுத்து அவர் கடந்த 15 நாட்களில் பீட்சா டெலிவரி செய்த 72 வீடுகளில் உள்ளவர்களை தனிமைப்படுத்த போலீசார் முடிவு செய்தனர். அந்த 72 வீடுகளில் உள்ளவர்களும் தற்போது தங்களை தாங்களே வீடுகளில் தனிமைப்படுத்தபட்டுள்ளனர் 
 
மேலும் அந்த இளைஞருடன் பணி செய்யும் சக டெலிவரி இளைஞர்களும், அவரது வீட்டிற்கு அருகில் உள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பீட்சா டெலிவரி செய்த இளைஞர்களின் தொடர்பில் இருந்த யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்றும் இருப்பினும் 28 நாட்கள் அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. டெல்லியில் ஒரே ஒரு இளைஞரால் 72 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது