திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2016 (20:54 IST)

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த விலை உயர்வின் படி நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. 


 

 
கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை குறைக்க ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ரஷ்ய நாடும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
 
கடந்த சில மாதங்களாக 50 டாலருக்கும் குறைவாகவே இருந்து வந்த கச்சா எண்ணெய் பேரல் விலை தற்போது 55 டாலரை கடந்துள்ளது. அதன்படி கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் நாடுகள் விலையை அதற்கேற்ப நிர்ணயித்து வருகின்றனர்.
 
அதன்படி இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த விலை உயர்வின் படி நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.21 உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79 உயர்ந்துள்ளது.