திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2017 (11:52 IST)

கமிஷன் வேண்டும் இல்லையெனில் பகலில் மட்டுமே பெட்ரோல் பங்க்: டீலர்கள் கரார்!!

பெட்ரோல், டீசல் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கமிஷனை உயர்த்த வேண்டும் என மூன்று கட்டப் போராட்டங்களை நடத்தப் போவதாக பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளனர். 


 
 
1000 லிட்டர் பெட்ரோல் விற்பனைக்கு ரூ.2,570, 1000 லிட்டர் டீசல் விற்பனைக்கு ரூ.1,620 கமி‌ஷன் பெற்று வருவதாகவும், இந்த கமிஷன் தொகையை உயர்த்த வேண்டும் எனவும் பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரவி ஷிண்டே கூறியுள்ளார்.
 
மேலும், இதற்கு அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரை செய்து அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. இதை ஏற்று, கமி‌ஷன் தொகையை அதிகரித்து தர வேண்டும். 
 
இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தராவிட்டால், மூன்று கட்ட போரட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
 
அந்த மூன்று கட்ட போரட்டம்:
 
# முதல் கட்டமாக மே மாதம் 10 ஆம் தேதி பெட்ரோல், டீசலைக் கொள்முதல் செய்யாமல், 'கொள்முதல் இல்லா நாள்' கடைப்பிடிக்கப்படும்.
 
# அடுத்து மே மாதம் 14 ஆம் தேதி முதல் ஞாயிறுதோறும் பெட்ரோல் நிலையங்கள் இயக்கப்படாது.
 
# இறுதியாக மே மாதம் 15 ஆம் தேதி முதல் பெட்ரோல் நிலையங்கள் பகலில் மட்டுமே (காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை) இயங்கும்.