1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 17 நவம்பர் 2018 (16:18 IST)

4 வயது சிறுமி... 42 வயது ஆண்ட்டி: லிப்டில் நடந்த கோரம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 4 வயது சிறுமி ஒருவரை 42 வயது பெண் ஒருவர் லிப்டில் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் உள்ள டிம்போ நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தயானந்த் - சரிகா தபதியினரின் மகன் பியூஸ், மகள் ஜான்கவி.
 
குறிப்பிட்ட நாளன்று இரு குழந்தைகளும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அதே குடியிருப்பை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் சிறுமியை லிப்டில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். 
 
லிப்ட் நகரத்துவங்கியதும் விளக்குகளை அனைத்து அந்த பெண், சிறுமியை கடுமையாக தாக்க துவங்கியுள்ளார். வலி தாக்க முடியாத சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால், லிப்டில் இருந்து சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட குடியிருப்புவாசிகள் உடனடியாக லிப்ட்டை நிறுத்தியுள்ளனர். 
 
பின்னர் சிறுமியை அடித்த அந்த பெண்ணுக்கு பலத்த அடிக்கொடுத்துள்ளனர். பிறகு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அந்த பெண் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அந்த பெண் எதற்காக சிறுமியை அடித்தார் என்பது தெரியவில்லை.