1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (10:35 IST)

50% மாஸ்க் போடுவதில்லை.. மீதி பேர் சரியா மாஸ்க் மாட்டுவதில்லை! – ஆய்வில் தகவல்!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் 50 சதவீதம் மக்கள் மாஸ்க் அணிவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 4 லட்சத்தை தாண்டியது. தற்போது பலத்த கட்டுப்பாடுகளால் 3 லட்சத்திற்கு குறைவாக தினசரி பாதிப்புகள் இருந்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய சொல்லி மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் நாட்டில் 50 சதவீதம் மக்கள் மாஸ்க் அணிவதில்லை என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஸ்க் அணிபவர்களிலும் 63 சதவீதம் மக்கள் முறையாக மூக்கு, வாயை மூடும்படி மாஸ்க் அணிவதில்லை என்றும் கூறப்படுகிறது.