'நீங்கள்தான் பிரதமர்': மாயாவதியை புகழ்ந்த பிரபல நடிகர்

Last Modified வெள்ளி, 15 மார்ச் 2019 (22:10 IST)
ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவீயின் சகோதரரும், பிரபல நடிகருமான பவன்கல்யாண், ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால் இரண்டிலும் ஜனசேவா கட்சி போட்டியிடுகிறது.
மேலும் ஜனசேவா கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்துள்ளதால் ஆந்திராவில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் கூட்டணியை உறுதி செய்ய சமீபத்தில் உத்தரபிரதேசம் சென்ற பவன்கல்யாண், மாயாவதியுடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, 'மாயாவதி தான் அடுத்த பிரதமர் என்று கூறினார். பதிலுக்கு நன்றிக்கடனாக 'நீங்கள் தான் அடுத்த ஆந்திர முதல்வர்' என்று மாயாவதி கூறினார். இருவரும் மாறி மாறி பதவியை பங்கு போட்டு கொண்டதை ஆந்திர வாக்காளர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :