புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By VM
Last Updated : வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (10:56 IST)

ஆந்திராவை சுழன்று அடித்த என்டிஆரின் உண்மை கதை... வைரலாகும் லட்சுமியின் என்டிஆர் டிரெய்லர்!

நாம் அண்மையில் மறைந்த ஆந்திர முதல்வர் என்டிஆரின் ( என் டிராமராவின்) வாழ்க்கை வரலாறு குறித்த படத்தை பார்த்தோம். என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணா நடித்திருப்பார்.


 
இந்த படம் ஆந்திராவில என்.டி.ராமராவின் இளமை கால வாழ்க்கை முதல் அரசியல் வாழ்க்கை வரை என முக்கிய விஷயங்களை எடுத்துச் சொன்னது.
 
இந்நிலையில் என்டிஆர், லட்சுமி பார்வதி என்ற பெண்ணை தனது கடைசி காலத்தில் திருமணம் செய்து கொண்டது அந்த படத்தில் பெரிதாக இருக்காது. இந்நிலையில் லட்சுமியின் என்டிஆர் என்ற பெயரில் சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார். பி விஜயக்குமார் என்பவர்  என்டிஆர் வேடத்தில் நடித்துள்ளார்.  யோக்னா ஷெட்டி லட்சுமி பார்வதி வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் என்டிஆர் மற்றும் அவருடன் இருந்த லட்சுமிக்கும் இடையே இருந்த தொடர்பு, அதனால் அவரது அரசியல் செல்வாக்கு சரிந்தது உள்ளிட்டவற்றை  காட்சிபடுத்தியுள்ளார்.
 
ஆந்திராவில் தேர்தல் நேரத்தில் இந்த படம் வெளியாக உள்ளதால், ஆளும் தெலுங்கு சேதம் கட்சிக்கு எதிராக  இப்படம் இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் லட்சுமியின் என்டிஆர் படத்துக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்  பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று வெளியான டிரெய்லரை 8 மணிநேரத்தில் 27 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 
 
வீடியோ லிங்க்