வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2017 (22:16 IST)

சாம்பல் கழிவுகள்: வடசென்னை அனல்மின் நிலையத்திற்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

வடசென்னையில் உள்ள அனல்மின் நிலையத்தின் சாம்பல் கொசஸ்தலை ஆற்றில் கலப்பதால் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படும் நேரத்தில் அந்த பகுதி மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தெரிவித்ததோடு, நேரில் சென்று ஆய்வு செய்தார்

இந்த நிலையில் வடசென்னை அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் படிந்துள்ள கொசஸ்தலை ஆற்றை வடசென்னை அனல்மின் நிலையம் தனது சொந்த செலவில் தூர்வார வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மேலும் வடசென்னையில் சாம்பல் கழிவுகளால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்களுக்கு தேவையான குடிநீரையும் அனல் மின் நிலையமே வழங்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் இந்த அதிரடி உத்தரவால் வடசென்னை பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.