மேற்குவங்க ரயில் விபத்து.. போலீசில் புகார் அளித்த பெண் கூறிய திடுக்கிடும் தகவல்..!
சமீபத்தில் மேற்குவங்க மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் இந்த ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த ரயில் விபத்துக்கு ஓட்டுநர்கள் தான் காரணம் என்று அந்த ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்த நிலையில் அவர் தற்போது அப்படி ஒரு புகாரை நான் அளிக்கவே இல்லை என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது தன்னிடம் காவலர்கள் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார்கள் என்றும் அதில் சில வெற்று காகிதமும் இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரயில் ஓட்டுநர்கள் மீது நான் புகார் அளித்துள்ளேன் என்று செய்தியை பார்த்து தான் நான் அறிந்து கொண்டதாகவும், என்னிடம் வாங்கிய வெற்று காகிதத்தில் காவல்துறையினர் புகார் அளித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva