1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 மே 2024 (11:11 IST)

தனியாக கழன்று விழுந்த மாநகர பேருந்தின் கதவு.. பேருந்துக்காக காத்திருந்த பெண் காயம்..!

சென்னையில் மாநகர பேருந்தின் கதவு திடீரென கழன்று விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த பெண் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியில் மாநகர பேருந்தில் இருந்த கண்டக்டர் இருக்கை கழண்டு விழுந்ததால் அவர் காயமடைந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று சென்னை திருமங்கலத்தில் மாநகர பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த பேருந்தின் கதவு விழுந்ததில் பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண் படுகாயம் அடைந்ததாகவும் இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் கதவு ,பேருந்து பெயர் பலகை ஆகிவற்றை ஓட்டுநர் நடத்துனர் மறைத்து வைத்ததோடு காயமடைந்த பெண்ணை சிகிச்சை முடிந்த கையோடு வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
 
ஏற்கனவே தமிழகத்தில் ஆங்காங்கே பழைய பேருந்துகளால் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இது போன்ற விபத்துக்கள் மேலும் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் காலாவதி ஆன பேருந்துகளை இயக்கக் கூடாது என்றும் பயணிகள் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran