வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (11:03 IST)

முன்கூட்டியே முடிவடைகிறதா நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிவடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டும் சமீபத்தில் தொடங்கியது என்பதும் கிரிப்டோகரன்சி குறித்த மசோதா, திருமண வயதை 21 ஆக மாற்றும் மசோதா உள்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் விவசாய மசோதாக்கள் திரும்பப்பெறும் மசோதாக்களும் நிறைவேற்றப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிகளின் அமளியுடன் நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளையுடன் முடிவடைகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்தநிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் முன்கூட்டியே இன்று முடிவடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.