பெண்கள் கருக்கலைப்பு செய்ய அனுமதி! – நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்!
இந்தியாவில் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதிக்கும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் பல்வேறு காரணங்களால் தவறுதால உண்டாகும் கர்ப்பத்தை கலைத்துக் கொள்ள பெண்களுக்கு சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கருத்தரித்த 20 வாரங்களுக்குள் பெண்கள் விரும்பினால் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என சட்டம் இருந்து வந்தது.
தற்போது இந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கருத்தரிப்பு கால அவகாசத்தை 20 வாரத்திலிருந்து 24 வாரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.