1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (12:26 IST)

நாடாளுமன்றம் தொடங்கிய ஒரே நிமிடத்தில் ஒத்திவைப்பு; ராகுல் காந்தி தகுதி நீக்கம் விவகாரம்..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கூட்டம் தொடங்கிய ஒரே நாளில் ஒத்திவைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாடாளுமன்றம் தொடங்கிய முதல் நிமிடமே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கூச்சம் குழப்பம் நிலவியது. இதனை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் மக்களவை மாலை 4 மணி வரையிலும் மாநிலங்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுவரை நாடாளுமன்றம் அதானி விவகாரம் காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ராகுல் காந்தி விகாரத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran