1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Pan and Aadhaar link final date extended

அடுத்தாண்டு வரை பான் - ஆதார் இணைக்க அவகாசம்!

Pan Aadhar
பான் - ஆதார் எண் இணைப்புக்கு அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியது மத்திய அரசு. 
 
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. 
 
பிறகு பல்வேறு காரணங்களால் ஆறு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக செப்டம்பர் 31க்குள் இணைக்க வேண்டும் என்ற கால அவகாசம் டிசம்பர் 31 ஆக நீட்டிக்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் ஒரு வாய்ப்பாக 2020 மார்ச் மாதம் இறுதி வரை கால அவகாசம் வழங்கியது மத்திய நிதி அமைச்சகம். 
 
இந்நிலையில், பான் - ஆதார் எண் இணைப்புக்கு அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது மத்திய அரசு. கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் மேலும் அவகாசம் வழங்கியது மத்திய அரசு. 
அடுத்த கட்டுரையில்
டூப்ளிகேட் இ-பாஸ் வைத்து லாபம் பார்த்த டூரிஸ்ட் வாகன நிறுவனங்கள்! – மோசடி அம்பலம்!