பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதை இடைத்தேர்தல் நிரூபித்துவிட்டது: ப.சிதம்பரம்
பாஜக பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என முத்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த 7 தொகுதி இடைத்தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்திலேயே ஒரு தொகுதியில் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றார். மேலும் சில இடங்களிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இது குறித்து கருத்து கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பாஜகவைத் தோற்கடிக்க முடியும் என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்றும் இண்டியா கூட்டணியை பார்த்து பாஜக பயப்படுவதால் தான் இந்தியா என்ற பெயரை அக்கட்சி எதிர்க்கிறது என்றும் கூறினார்
மேலும் நாங்கள் பாரத் என்ற பெயருக்கு விரோதிகள் அல்ல என்றும் ஆனால் பாஜக இந்தியாவுக்கு விரோதமானது என்றும் அவர் கூறியுள்ளார். ப சிதம்பரம் கூறியது போல் இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி பொது தேர்தலிலும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Edited by Mahendran