திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (15:55 IST)

அடுத்த மாதம் திறக்கப்படுகிறதா திரையரங்குகள்? சினிமா ரசிகர்களுக்கு நற்செய்தி!

டெல்லியில் அடுத்த மாதம் இறுதியில் திரையரங்குகள் திறக்கப்பட்டு கடுமையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி மூடப்பட்ட திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதற்கு மிக முக்கியக் காரணம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை என்பதே. இந்நிலையில் டெல்லியில் அடுத்த மாத இறுதியில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தியேட்டர்கள் திறந்தாலும் கடுமையான தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படும் எனவும், மூன்று இருக்கைகள் இடைவெளி விட்டு மட்டுமே நபர்கள் அமர வைக்க படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.