செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (09:22 IST)

பெகாசஸ் விவகாரம் - 500க்கும் மேற்பட்டோர் தலைமை நீதிபதிக்கு கடிதம்!

சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு கடிதம். 

 
இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் வழியாக இந்திய அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களை அரசு ஒட்டுகேட்டதாக வெளியான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சிகள் தொடர்ந்து மக்களவை, மாரிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் இன்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் இது குறித்து சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், அனைத்து தரப்பு மக்களையும் பழிவாங்குவதற்கு இந்த உளவு மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.