1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 ஜூன் 2022 (14:19 IST)

மெட்ரோ ரயில் கட்டணம் வெறும் ஐந்து ரூபாய் தான்: அதிரடி அறிவிப்பு!

Kochi Metro
இன்று ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரயில் கட்டணம் வெறும் 5 ரூபாய் தான் என கொச்சி மெட்ரோ ரயில்வே நிர்வாகம்அறிவித்துள்ளது
 
கொச்சியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை அடுத்து இன்று ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் ஐந்து ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்றும் எந்த நிலையத்தில் இருந்து எந்த நிலையத்திற்கும் ஐந்து ரூபாய் கட்டணத்தில் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
கேரள மாநிலம் கொச்சியில் ஆலுவா முதல் பேட்டை வரை 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் கடந்து 2017ம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று ஐந்தாவது ஆண்டு நிறைவடைந்து ஐந்து ரூபாய் கட்டனத்தில் மெட்ரோ பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் சலுகை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது