1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2024 (17:50 IST)

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும்- பிரதமர் மோடி

Modi
தேர்தல் பிரசாரத்தின்போது எந்த தடையும் ஏற்படுத்தாத மேற்கு வங்க அரசிற்கு நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர், திரிணாமுல் , உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இன்று மேற்குவங்கம் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற  பிரதமர் மோடி பேசியதாவது:
 
முதலில் மம்தா திதிக்கு நன்றியை தெரிக்கிறேன். 2019 ஆம் ஆண்டில் இதே மைதானத்திற்கு ஒரு பேரணியின் உரையாற்ற வந்தேன். அப்போது, அவர் இம்மைதானத்திற்கு நடுவில் ஒரு மேடையைக் கட்டினார். அதன் அளவை சிறியதாக மாற்றினார்.  இதற்குப் பொதுமக்கள் பதிலளிப்பர் என்று கூறியிருந்தேன். இன்று அப்படி எதுவும் செய்யவில்லை.
 
 இன்று எந்த தடையும் ஏற்படுத்தாத மேற்கு வங்க அரசிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் 25கோடி மக்களை வறுமையில் மீட்டது பாஜக அரசுதான்.  பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும். சந்தேஷ்காலி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை காக்க திரிணாமுல் அரசு முயன்றதை நாடு முழுவதும் பார்த்தது. ஆனால், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க  பாஜக தீர்மானித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.