திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 23 நவம்பர் 2019 (16:03 IST)

குறைந்த விலையில் வெங்காயம்!: அலைகடலென திரண்ட கூட்டம்!

பீகாரில் உள்ள அங்காடியில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வெங்காய தட்டுப்பாட்டால் வெங்காய விலை கடுமையான ஏற்றத்தை சந்தித்துள்ளது. பீகாரில் ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாட்னாவில் உள்ள அங்காடியில் கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் மக்கள் பலர் குவிந்தனர். பல மணி நேரம் வரிசைகளில் காத்திருந்து வெங்காயம் வாங்கி சென்றனர்.

ஒரு நபருக்கு 2 கிலோ வெங்காயம் என்ற ரீதியிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் திருமண வீடுகளில் பலருக்கு சமைக்க வேண்டி வெங்காயம் அவசியப்படுவதால் அழைப்பிதழை காட்டி 25 கிலோ வெங்காயம் மலிவு விலையில் வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர்.