1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 8 ஜூன் 2020 (07:21 IST)

ஒருநாள் பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா: கொரோனாவின் கோரத்தாண்டவம்

ஒருநாள் பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா
உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 6வது இடத்தில் இருக்கிறது என்பது தெரிந்ததே. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து, ஆகிய ஐந்து நாடுகளை அடுத்து ஆறாவது நாடாக இந்தியா இருந்தாலும் நேற்று ஒரே நாளில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் கணக்கெடுப்பின்படி இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதனை அடுத்து ஒரே நாளில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் உள்ளது. பிரேசில் நாட்டில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அமெரிக்கா பிரேசில் நாடுகளை அடுத்து ஒரு நாளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது அதிர்ச்சியான தகவலாக உள்ளது. இந்தியாவில் ஒரே நாள் கொரோனா பாதிப்பு 10,864 
 
மேலும் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,07,449 என்பதும், மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 112,469 என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 691,962என்பதும், மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 37,312 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் 257,486 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 7,207 பேர் கொரோனாவால் பலியாகியும் உள்ளனர்.