சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொன்றால் ரூ.1 கோடி பரிசு! கர்னி சேனை
சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக்கொலை செய்தால் ஒரு கோடி பரிசு வழங்குவதாக கர்னி சேனையின் தலைவர் ராஜ் செகாவத் அவர்கள் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்குப் பொறுப்பேற்ற லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கொலை செய்யும் காவல்துறை அதிகாரிக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி அளிப்பதாக கர்னி சேனை அமைப்பு அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி கர்னி சேனையின் தேசிய தலைவர் ராஜ் செகாவத் கூறியபோது, "சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை கொலை செய்யும் எந்த காவல்துறை அதிகாரிக்கும் ஒரு கோடியே 11 லட்சம் 11 ஆயிரத்து 111 ரூபாய் பரிசாக வழங்கப்படும்" என்றார்.
இந்த அறிவிப்பு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். சமூக நல ஆர்வலர்கள் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.