திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (09:51 IST)

இந்திய சுதந்திர தினத்திற்கு மரியாதை செலுத்தும் ‘கூகுள்’

இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை ஒட்டி, கூகுள் நிறுவனம் மரியாதை செலுத்தும் விதமாக டூடுலாக வெளியிட்டுள்ளது.
 

 
நாட்டின் 70வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் செங்கோட்டை மைதானத்தில் பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.
 
இந்நிலையில், கூகுள் நிறுவனம் இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை மரியாதை செலுத்தும் விதமாக டூடுலாக வெளியிட்டுள்ளது.
 
அதில், இந்தியா சுதந்திர தினம் பெற்ற நள்ளிரவில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பேசிய “Tryst with Destiny” என்ற வரலாற்று சிறப்புமிக்க உரையை முகப்பு பக்கத்தில் வைத்து கூகுள் பெருமைப்படுத்தி உள்ளது.