திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:56 IST)

ஒமைக்ரான் இந்தியாவில் நுழைந்திருக்க வாய்ப்பு: நுண் உயிரியலாளர் ககன்தீப் கங் தகவல்!

ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் நுழைந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என நுண் உயிரியலாளர் ககன்தீப் கங் அவர்கள் கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தென்னாப்பிரிக்காவில் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் அதுமட்டுமின்றி பிரேசில் இத்தாலி உள்பட சில நாடுகளிலும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நுண் உயிரியலாளர்  ககன்தீப் கங் என்பவர் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் ஒமைக்ரான் உருமாற்றம் அடைந்துள்ளது என்றும் இந்த வைரஸ் இந்தியாவில் நுழைந்து இருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் 
 
மேலும் நவீன மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்