1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 2 டிசம்பர் 2017 (19:06 IST)

தற்கொலை செய்ய தூக்க மாத்திரை கேட்ட அனாதையாக விடப்பட்ட மூதாட்டி

திருப்பதியில் அனாதையாக விடப்பட்ட அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள சாலையில் செல்பவர்களிடம் தூக்க மாத்திரை கேட்டு வருகிறாராம்.

 
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தினவள்ளி என்பவர் தன்னுடைய இளையமகன் வீட்டில் வசிந்து வந்துள்ளார். இவருக்கு 4 மகன்கள். மூத்த மகன் சிறுவயதிலே இறந்துவிட்டார். இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இளைய மகன் 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அவரது மற்ற இரு மகன்களில் யாரோ ஒருவர் ரத்தினவள்ளியை திருப்பதிக்கு அழைத்துச் சென்று அனாதையாக விட்டு சென்றுள்ளனர்.
 
தற்போது ரத்தினவள்ளி கபிலேஸ்வரசாமி கோயில் அருகே உள்ள சாலை ஓர நடைமேடையில் நடக்க முடியாத நிலையில் பிச்சை எடுத்து வருகிறார். சாலையில் செல்வோர்களிடம் தற்கொலை செய்துக்கொள்ள தூக்க மாத்திரைகள் வாங்கி தரும்படி கேட்டு வருகிறார். இதனால் பொதுமக்கள், ரத்தினவள்ளியை தன்னார்வ தொண்டு அமைப்பினரோ அல்லது அவருடைய மகன்களோ அழைத்துச் சென்று பராமரிக்கலாம் என கூறி வருகின்றனர்.