ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2022 (23:02 IST)

பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்- இமாச்சல பிரதேச முதல்வர்

himachal
இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் கடந்த 12 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 68 இடங்களில் காங்கிரஸ் கடசி 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஆளும் கட்சியாக இருந்த பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதது.

எனவே, காங்கிரஸ் கட்சியின் சுக்விந்தர் சிங் முதல்வராக பதவியேற்றார்.  இவருக்கு  அம்மா நில கவர்னர் ராஜேந்திர விஷ்வ நாத் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இம்மாநிலத்தின் துணை முதல்வராக முகேசஷ் அக்னி கோத்ரி பதையேற்றார்.  இவர்கள் தலைமையிலான அமைச்சரவை இன்னும் சில  நாட்களில் அமையும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், நேர்மையான ஆட்சி வழங்குவோம்  என்று, இதுவரை கூறிய 10 உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம் என்று முதல்வர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj