வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (07:00 IST)

திருப்பதி சன்னிதானத்தில் பிறவி ஊமை பேசிய அதிசயம்

திருப்பதி ஏழுமலையானை தரிசித்தால் திருப்பம் ஏற்படும் என்று கூறுவதுண்டு. இதன்படி 18 வயது இளைஞர் ஒருவர் பிறவி ஊமையாக இருந்த நிலையில் அவர் ஏழுமலையான் சன்னிதானத்தில் திடீரென பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது



 


தலைநகர் டெல்லியை சேர்ந்த ஒரு தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளாக லண்டனில் வசித்து வருகிறார். இவர்களுடைய ஒரே மகன் தீபக், பிறவியிலேயே பேச்சுத்திறன் இல்லாமல் இருந்தார். தீபக்கிற்கு தீபக் 4 வயதாக இருந்தபோது, சிறுவனுக்கு பேச்சு கிடைக்க வேண்டும் என்று, திருப்பதி ஏழுமலையானை அந்த தம்பதியினர் வேண்டிக்கொண்டனர். இருப்பினும் தொடர்ந்து தங்களது மகனுக்கு அந்த தம்பதியினர் பேச்சுப்பயிற்சி கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் லண்டனில் இருந்து இந்தியா வந்த அந்த தம்பதியினர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிவு செய்தனர். அங்கு, டிக்கெட் வாங்கிக் கொண்டு, கோயிலுக்குள் சென்று, ஏழுமலையானை தரிசித்தனர். பின்னர் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டபோது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என, கோஷமிட்டனர். இதை பார்த்த தீபக், திடீரென தானும், கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டார். இதைக் கண்டதும், தீபக்கின் பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

முதலில் சிறிது நேரம் மழலை மொழியில் பேசிய தீபக், பின்னர் தொடர்ச்சியாக பேச ஆரம்பித்தார். இந்த அதிசயத்தை அங்கிருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.