அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய NRI: 100 கோடி சொத்து இருக்குது.. ஆனாலும் புலம்பல் ஏன்?
அமெரிக்காவில் நீண்ட தொழில் வாழ்க்கைக்கு பிறகு, ரூ. 100 கோடிக்கும் மேல் நிகர மதிப்புடன் இந்தியா திரும்பியுள்ள ஓர் இந்தியர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
ஒரு நடுத்தர குடும்பத்திலிருந்து முன்னேறி, பங்கு முதலீடுகள் மூலம் மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கியுள்ளதாக அவர் ரெடிட் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்தியா திரும்பியுள்ள அவர், நிதி சுதந்திரம் மகிழ்ச்சி அளித்தாலும், வாழ்க்கையில் கட்டமைப்பின்மை மற்றும் சமூக எதிர்பார்ப்புகள் இல்லாதது ஒருவித வெற்றிட உணர்வை தருவதாகக் கூறுகிறார்.
அவருடைய தினசரி வழக்கம் உடல் ஆரோக்கியம், வாசிப்பு, குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுதல் என வசதியான அடுக்குமாடி குடியிருப்பில் நகர்கிறது. சமையல்காரர்கள் மற்றும் பணிப்பெண்கள் போன்ற சேவைகளும் எளிதில் கிடைக்கின்றன.
முன்னர் உலகம் முழுவதும் பயணம் செய்த அவர், இப்போது சலிப்பை உணர்ந்தாலும், மீண்டும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் அழுத்தமான வேலைக்கு திரும்புவது அவருக்கு சற்றும் பிடிக்கவில்லை. குடும்பத்துடன் செலவிடும் மகிழ்ச்சி எந்தப்பதவி அல்லது பட்டத்தை விடவும் முக்கியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran