2024ஆம் ஆண்டு வரை புதிய என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது: அதிரடி அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்ஜினியரிங் கல்லூரிகளின் தற்போதைய போக்கு, மாணவர்கள் சேர்க்கை மற்றும் என்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு புதிய இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு 2024 ஆம் ஆண்டு வரை அனுமதி கிடையாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது
என்ஜினீயரிங் கல்லூரிகள் குறித்து ஆய்வு செய்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது