திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 15 ஜூன் 2024 (12:12 IST)

ஆனி தமிழ் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

Monthly astro
கிரகநிலை:
தனவாக்கு ஸ்தானத்தில் சனி - தைரிய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர், புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.




கிரகமாற்றம்:

ஆனி மாதம் 12ம் தேதி (26.06.2024) புதன்கிழமை அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து புத பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்
ஆனி மாதம் 23ம் தேதி (07.07.2024) புதன்கிழமை அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்
ஆனி மாதம் 27ம் தேதி (11.07.2024) வியாழக்கிழமை அன்று சுக ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்
ஆனி மாதம் 32ம் தேதி (16.07.2024) செவ்வாய்கிழமை அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சூர்ய பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்

சொந்த உழைப்பினால் உயரும் திறமை உடைய மகர ராசியினரே உங்களுக்கு பிறரின் உதவிகள் கிடைக்கும். இந்த மாதம் ஆக்கபூர்வமான யோசனைகள் வரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்காலநலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது.

திருவோணம்:
தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினர் கடுமையான உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

அவிட்டம் 1,2 பாதம்
எப்போதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: துர்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10, 11
அதிர்ஷ்ட எண்கள்: 26, 27
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: வியாழன், வெள்ள