புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:24 IST)

Fastag போடு இல்லனா டபுள் கட்டணத்தை கொடு : மத்திய அரசு கெடுபிடி !

சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு. 

 
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடிகளில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இன்னமும் பல வாகனங்கள் பாஸ்டேக் வசதி பெறாமல் உள்ளன. இதனால் நேரடி கட்டணம் செலுத்த ஒரு கவுண்டரும், பாஸ்டேக் மூலம் பணம் செலுத்த மற்ற கவுண்டர்களும் என சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் ஜனவரி 1, 2021 முதல் நாடு முழுவதும் சுங்க சாவடிகளில் முழுமையாக பாஸ்டேக் முறையில் மட்டுமே கட்டணம் பெறப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், பாஸ்டேக் கட்டாயமாக்கப்படுவதை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததால் மேலும் ஒரு மாதத்திற்கு இத்னை ஒத்திவைத்தது. 
 
இதனிடையே, நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கட்டாயம் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாமல் வாகனங்கள் சென்றால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட இரு மடங்கு செலுத்த வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.