வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 நவம்பர் 2020 (11:29 IST)

மருத்துவ மேற்படிப்பு: இந்த ஆண்டு 50% இட ஒதுக்கீடு இல்லை!

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் மருத்துவ மேற்படிப்புகளில் சேரும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என அதிரடியாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது 
 
இந்த தீர்ப்பில் இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு அளித்த இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பால் 25 கல்லூரிகளில் 584 இடங்கள் ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை என்பது உறுதியாகி உள்ளது