வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (10:55 IST)

நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் பதிலுரை

பிப்ரவரி 1ஆம் தேதி பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்றது 
 
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உள்ளார். மத்திய பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்தப்பட்டது என்றும் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பல திட்டங்கள் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்
 
மேலும் பட்ஜெட்டில் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் வருங்காலத்தில் தொழில்நுட்பம் இந்தியாவின் மிகச் சிறந்த அளவில் முன்னேற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை குறித்த தகவல்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகி வருகின்றன