செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 2 ஜூன் 2021 (07:44 IST)

கொரோனா பரவல் எதிரொலி: 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுமா?

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுப்பியுள்ளது 
 
இதற்கு பதிலளித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி ஏற்கனவே கொரோனா நேரத்தில் ஐந்து மாநிலங்கள் தேர்தலை நடத்திய அனுபவம் தங்களுக்கு இருப்பதாகவும் எனவே அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கூறியுள்ளார் 
 
உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் கோவா மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களில் சட்டசபை காலம் முடிவடைகிறது. இதனை அடுத்து உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தலை நடத்தி முடிவுகளை கவர்னரிடம் ஒப்படைக்க வேண்டியது தங்களுடைய கடமை என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார் 
 
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியும் மீதமுள்ள 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது