1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated: செவ்வாய், 19 ஜூலை 2022 (15:40 IST)

சீன எல்லையில் சாலை பணி செய்த 19 ஊழியர்கள் மாயம்: சீனாவுக்கு கடத்தப்பட்டார்களா?

Border
இந்தியா சீனா எல்லையில் சாலை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 19 பேர் மாயமானதாகவும், அவர்களில் ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அருணாசல பிரதேச மாநிலத்தை ஒட்டிய இந்திய சீன எல்லையில் கடந்த சில மாதங்களாக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 19 தொழிலாளர்கள் திடீரென மாயமானதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். மீதி உள்ள 18 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
காணாமல்போன 18 சாலை பணியாளர்களை சீன ராணுவத்தினர் கடத்தியிருக்கலாம் என்று கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது