செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2017 (15:43 IST)

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் புதிய கட்டுபாடு; அதிர்ச்சியில் பயணிகள்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி குறிப்பிட்ட 7 வங்கிகளின் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.


 

 
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகளுக்கு தற்போது ஐ.ஆர்.சி.டி.சி பல சலுகைகளை வழங்கி வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தை ரயில்வே துறை பயணிகள் எளிதாக முன்பதிவு செய்ய வழிவகுத்துள்ளது. இந்நிலையில் தற்போது ஐ.ஆர்.சி.டி.சி பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
அதாவது, இனி ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் முன்பதிவு செய்து கட்டணம் செலுத்த குறிப்பிட்ட 7 வங்கிகளின் டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, யுனைட்டைட் பாங்க் ஆப் இந்தியா, சென்டிரல் வங்கி, ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் கார்டுகள் மூலமே இனி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
 
இந்த குறிப்பிட்ட 7 வங்கிகளில் கணக்கு தொடங்காதவர்கள், நெட் பேங்கிங் மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.