வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 24 ஜனவரி 2024 (19:11 IST)

புதிய இந்தியா: விவேகம் மற்றும் உணர்திறன் குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

Gurudev Sri Sri Ravi Shankar
இந்தியாவின் அதிகாரம் உயர்ந்துள்ளது, இந்தியாவின் கௌரவம் பெருகியுள்ளது. இது மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்று மட்டுமல்ல; கலாச்சார ரீதியாக துடிப்பான, சமய  ரீதியாக ஒருங்கிணைக்கப் பட்ட, மற்றும் ஆன்மீக ரீதியில் உங்களை உயர்த்தும் நாடு ஆகும்.
 
இன்னும் செய்ய வேண்டிய முன்னேற்ற முயற்சிகள்  நிறைய உள்ளன, ஆனால், நாம்  சரியான திசையில் செல்கிறோம். இந்த நாட்டில் வரும் தலைமுறையினருக்கு எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
 
இந்தியாவின் குரல் எப்போதும் நல்லறிவு மற்றும் நீதிக்கான குரல். இது உலகம் கவனிக்கத் தொடங்கி விட்ட ஒன்று ஆகும். - நாம் புத்திசாலிகள், நம்மைக்  கொடுமைப்படுத்த முடியாது, உலகம் முழுவதும் உள்ள  மக்களின் உணர்வுகள் மற்றும் வலிகளை உணர்ந்து கொள்ளும் திறன் உடையவர்கள். உலக அமைதியில் இந்தியா ஆற்றக்கூடிய பங்கைக் காண இன்று உலகம் விழித்தெழுந்து கொண்டிருக்கிறது.
 
அத்தகைய பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக் கொண்டு விட்டோம். இந்தியா பல கலாச்சாரங் கள் மற்றும் பாரம்பரியங்களின் கலவை ஆகும். நாம் அனைத்து மரபுகளையும் சமயங்களை யும் மதிக்கிறோம். இந்தியாவில் அனைத்து சமயங்களும் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளன,  அவை அனைத்தும் மதிக்கப் பெறுகின்றன.
 
நாட்டில் ஒரு பகுதியில் கம்யூனிஸ்ட் அரசு உள்ளது, உலகில் எங்கும் இல்லாத பல கட்சி ஜனநாயகம் உள்ளது. பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் இரண்டு முதல் மூன்று பெரிய கட்சிகள் தாம் உள்ளன.
 
உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்டவர்கள் நாம்தான். இது இப்போது நமது வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகத் தெரிகிறது - நாம் மீண்டும் நமது வேர்களுக்குச் சென்றுவிட்டோம்.  இந்தியாவின் பெருமை, நமது கலாச்சாரம் மற்றும் நமது நாகரிகத்தை நாம் அங்கீகரித்துள்ளோம். இது நம் இளைஞர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் - இன்று அவர்கள் நமது வரலாறு, தத்துவம், ஆன்மீகம் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் - இது நமது மென் சக்தியாகத் திகழ்கிறது.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஒரு நேர்காணலில், ஜனநாயகமாக இருப்பதை விட சர்வாதிகாரமாக இருந்திருந்தால், இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி யிருக்குமா என்று என்னிடம் ஓர் கேள்வி  கேட்கப்பட்டது. மெதுவான வேகம் கொண்டதாக இருந்தாலும்  ஜனநாயகமாக இருக்கவே  விரும்புகிறோம் என்பதில் நமக்குத் தெளிவு உள்ளது. இங்கு தனிமனிதனின் குரல் கேட்கப்படுகிறது; பல குரல்கள் மற்றும் வலுவான குரல்கள் தேவைப்படுகின்றன. அவை விவேகமான குரல்களாக இருக்க வேண்டும்.
 
ஒரு குடும்பம் எப்போது நல்லிணக்கத்துடன்  இருக்கும்? ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் முன்னோக்கி செல்லும் பாதையை முழுமையாக புரிந்து கொள்ளும்போதுதான் முன்னேற்றம் ஏற்படும். அவர்கள் எதிர்க்க வேண்டிய நிலை ஏற்படும்போது  எதிர்த்து நிற்க  சுதந்திரம் உள்ளது. அவர்களின் ஒத்துழைப்பு தேவைப்படும்போது ஒத்துழைக்கிறார்கள். மொத்தத்தில், நலன் கருதி, அனைவரும் அமைதியான மகிழ்ச்சியான குடும்பத்தில் முன்னேறிச் செல்கிறார் கள், இந்தியாவும் அப்படித்தான்.
 
எதிர்க்கட்சிகளின் குரல் மிகவும் முக்கியமானது, எந்த ஒரு ஜனநாயகத்திற்கும் அது அவசிய மானதாகும். நாட்டின் வளர்ச்சிக்கு, அனைவருக்கும் பங்கு உள்ளது. எதிர்கட்சிகள் கண்டிப்பாக குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும், ஆனால் எதிர்ப்பிற்காக மட்டுமே என்று  எதிர்க்கக் கூடாது. அனைவரும் ஒன்று கூடி கொண்டாட வேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டு. சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே உள்ள ஒத்துழைப்பே ஒரு நாட்டை முன்னேற்றப் பாதையில் வேகமாக இயங்க வைக்கும்.
 
அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப்  பதிவு செய்து கொள்ள  வேண்டும். பதிவு செய்தவர்கள் கண்டிப்பாகச் சென்று வாக்களியுங்கள் - இது உங்கள் புனிதக் கடமை. மேலும் வாக்களிக்கும் போது உங்கள் ஜாதி , சமூகம் மற்றும் சமயத்தைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்கப் பார்க்காதீர்கள். நல்லவர் மற்றும் சமூகத்திற்குச் சேவை செய்யக் கூடியவருக்கே வாக்களியுங்கள்.
 
வேட்பாளர்கள் உங்களிடம் வாக்குக் கேட்க வரும்போது கடவுளைப் போல் நடந்து கொள் ளுங்கள். “ சரி;  நான் பரிசீலித்துப் பார்த்து வாக்களிக்கிறேன்”   என்று கூறுங்கள். அவர்கள் பணம் வழங்கினால், ஒரு போதும் அதற்கிணங்கி  உங்கள் வாக்குகளை சில கரன்சி நோட்டு களுக்கு விற்காதீர்கள். இது உங்கள் ஆன்மாவை  விற்பது போன்றது ஆகும். வாக்குகளுக்கு பணம் தேவையில்லை - அது  உங்கள் கொள்கையாக இருக்க வேண்டும்.
 
நமது  மக்கள் மிகவும் விவேகமானவர்கள். கிராமப்புறங்களில் கூட, மக்கள் மிகவும் விவேக மானவர்கள், மிகவும் புத்திசாலிகள்.
 
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் - துடிப்பான, வாழ்ந்து கொண்டிருக்கும்,  நன்கு சுவாசித்துக் கொண்டிருக்கும்  ஜனநாயகம். அதை நிலைநாட்டுவது நமது கூட்டுப் பொறுப்பு ஆகும்.