1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (21:51 IST)

உச்சகட்ட பாதிப்பில் டெல்லி : தொடர்ந்து எரியும் உடல்கள் - உறவினர்களின் கதறல் சத்தம்!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் டெல்லி உச்சகட்ட பாதிப்பில் உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க கூட இடமில்லாமல் உறவினர்கள் திண்டாடுகின்றனர். 
 
இறந்தவர்களின் உடல்கள் டோக்கன் முறையில் உடல்கள் எரிக்கப்பட்டு வருகிறது. மயானத்தில் போதிய ஆட்கள் இல்லாமல் உறவினர்கள் மூலமே விறகுகள் அடுக்கப்பட்டு பிணத்தை எரிக்கப்படுகிறது. எனவே திறந்தவெளி பகுதியில் தற்காலிக மயானம் அமைத்து இரவு பகலாக உடல்களை எரித்து வருகிறார்கள்.