திருப்பதி கோவிலில் தற்கொலை செய்த புதுமண தம்பதிகள்
திருப்பதி தேவஸ்தான விடுதி அறையில், ஒரு திருமண ஜோடி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலிக்கு சென்ற ஒரு தம்பதிகள், அங்குள்ள தேவஸ்தான விடுதியில் நேற்று அறை எடுத்து தங்கினர். இன்று காலை வெகு நேரமாக அவர்களின் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர், அவர்கள் தங்கியிருந்த் அறைக்கதவை திறந்து பார்த்தார். அப்போது அவர் பார்த்த காட்சி அவரை அதிர்ச்சியடைய வைத்தது.
காரணம், அங்கு தங்கியிருந்த ஜோடிகள் இருவரும், அந்த அறையில் தூக்கு போட்டி தற்கொலை செய்து பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.
உடனடியாக இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அவர்களின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தூக்கில் தொங்கும் பெண்ணின் கழுத்தில், புதிதாக கட்டிய தாலி இருந்துள்ளது. எனவே தற்கொலை செய்து கொண்ட அவர்கள் புது மண தம்பதிகளாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த சம்பத்குமார்(25) மற்றும் சத்யவாணி(25) என்பது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளதா? அல்லது அங்கு வந்து திருமணம் செய்து, அதன்பின் தற்கொலை செய்து கொண்டார்களா என்று போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.