வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 9 நவம்பர் 2016 (10:05 IST)

இரண்டு நாட்களுக்கு முன்னரே கசிந்த புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள்: ரகசியத்தை கசிய விட்டது யார்?

இரண்டு நாட்களுக்கு முன்னரே கசிந்த புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள்: ரகசியத்தை கசிய விட்டது யார்?

இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகள் பரவுவதை தடுக்கவும் அதிரடி நடவடிக்கையை எடுத்தது மத்திய அரசு. தற்போது உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் செல்லாது எனவும் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியும் ரிசர்வ் வங்கி கவர்னரும் அறிவித்தனர்.


 
 
திடீரென்று வந்த இந்த அறிவிப்பால் நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதாக பலரும் பாராட்டினர். ஆனால் பிரதமரும், ரிசர்வ வங்கி கவர்னரும் அறிவித்த இந்த புதிய 2000 ரூபாய் இரண்டு தினங்களுக்கு முன்னரே கசிந்தது குறிப்பிடத்தக்கது.
 
சமூக வலைதளங்களிலும், இணைய தளங்களிலும் இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த 2000 ரூபாய் புதிய நோட்டு வைரலாக பரவியது. பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றிலும் கடந்த 7-ஆம் தேதி புதிய 500, 2000 ரூபாய் வர உள்ளதாகவும் தற்போது உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் தகவல் வருவதாக கூறப்பட்டது.
 
கருப்பு பணத்தை ஒழிக்க ரகசியமாக வைக்கப்பட்டு எடுத்த இந்த நடவடிக்கையை பற்றிய தகவல் மற்றும் அந்த புகைப்படம் முன்கூட்டியே வெளியானது எப்படி என்ற சந்தேகம் தற்போது பலருக்கும் எழுந்துள்ளது. முன் கூட்டியே கசிய விட்டால் எப்படி கருப்பு பணத்தை தடுக்க முடியும். எனவே இதில் ஏதோ அதிகார துஸ்பிரயோகம் நடந்திருக்கிறது என பரவலாக மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.