திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (11:10 IST)

இது இந்திய பொருளாதாரத்தின் கருப்பு நாள்! – ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்!

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் #Black_Day_Indian_Economy என்ற ஹேஷ்டேகை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடியால் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்று செயல்பாட்டில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் பலர் தங்களிடம் இருந்த பணத்தை மாற்ற இயலாமால் பெரும் அலைச்சலுக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் இன்று பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5ம் ஆண்டில் நெட்டிசன்கள் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட துன்பங்களை பதிவிட்டு இந்திய பொருளாதாரத்தின் கருப்பு நாள் என பொருள் கொள்ளும் #Black_Day_Indian_Economy என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.