புதன், 19 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: திங்கள், 25 ஜூலை 2016 (08:53 IST)

நேபாள பிரதமர் ராஜினாமா

நேபாள பிரதமர் ராஜினாமா

நேபாள பிரதமர் கே.பி ஒளி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.



 
தொடர்ந்து அரசியல் குழப்பங்கள் நிலவும் நேபாளத்தில் கடந்த 10 ஆண்டுகளில், அந்த நாட்டு அரசுகள் 8 முறை நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை சந்தித்ததுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.ஒளி. இந்நிலையில் கூட்டாட்சி நடைப்பெற்று வந்த அந்த நாட்டில் கே.பி. ஒளிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக நேபாளி காங்கிரஸ் மற்றும் சி.பி.என்.-மாவோயிஸ்ட் கட்சிகள் அறிவித்தன. கே.பி. ஒளி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக அவை குற்றம்சாட்டின. 

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், தனக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்காது என்று தெரிந்து அடுத்து தனது பதவியை ராஜினாம செய்வதாக கே.பி. ஒளி பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.