நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு இன்று மீண்டும் தேர்வு!
கடந்த மாதம் நடந்த நீட் தேர்வை தவற விட்டவர்களுக்கு இன்று மீண்டும் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறாமல் இருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது.
ஆனால் போக்குவரத்து சிக்கல், கொரோனா பாதிப்பு ஆகியவற்றால் பலரால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது, இதனால் தேர்வு எழுத இயலாமல் போனவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் கொரோனாவால் தேர்வை தவறவிட்டவர்களுக்கு 14ம் தேதி நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
அதையடுத்து இன்று இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.