1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மேலும் நீட்டிப்பு: தேசிய தேர்வு முகமை

NEET
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று முன் தினத்துடன் அவகாசம் முடிந்த நிலையில் தற்போது மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
 
2022 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் மே 14-ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்ததாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 20ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எனவே வரும் வெள்ளி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்