Daily Horoscope
✕

நீட் தேர்வு முடிவுகள் - திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது!!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 17 அக்டோபர் 2020 (13:03 IST)
நீட் தேர்வு முடிவுகளில் திருத்தப்பட்ட பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை.
 
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 13ம் தேதி நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரபரப்பிலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தபோதிலும், மத்திய அரசு இந்த தேர்வை விடாப்பிடியாக நடத்தியது. 
 
3,862 மையங்களில் நடந்த இந்த தேர்வை நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 13 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியிருந்தனர் என்பதும், தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இந்த தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியானது. நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பில் குளறுபடி இருந்தது சர்ச்சையானது. இதனால் இணையதளத்தில் இருந்து நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவு நீக்கம் செய்யப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து திருத்தப்பட்ட பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை.

எல்லாம் காட்டு

நடக்குற பார்த்த போக்கிரி காமெடிதான் ஞாபகத்துக்கு வருது - பழனிச்சாமி நக்கல்

நீங்க கரூர்ல நில்லுங்க தலைவரே... நாமதான் ஜெயிக்கிறோம்! - ஸ்டாலினிடம் சொன்ன செந்தில் பாலாஜி

மகளிர் உரிமை தொகை ரூ.2500 எப்போது? - அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த அப்டேட்

வங்கி கணக்கு.. பணப்பரிமாற்றங்கள்.. அன்பில் மகேஷ் தப்பவே முடியாது..

கோவை சிறையிலிருந்து தப்பி சென்ற கைதி - இதுக்கு ஒரு எண்டே இல்லயா சார்!..

அடுத்த கட்டுரையில்
Show comments