1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2017 (18:48 IST)

தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும் - சொல்வது யார் தெரியுமா?

தமிழக இளைஞர்களின் நாகரீகத்தை பார்த்து டெல்லி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என என்.டி.டி.வி. தொலைக்காட்சி  இயக்குனர் சோனியா சிங் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஜல்லிகட்டு தடைக்கு எதிராகவும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
முக்கியமாக, சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இரவு, பகல் பார்க்காமல் அங்கேயே தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஆண்களின் நடுவில் தாங்கள் தூங்கினாலும், தங்களை அவர்கள் சகோதரன் மற்றும் தந்தை போல் பாதுகாத்து வருகின்றனர் என்றும், அக்கறை காட்டுகின்றனர் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அங்கு எந்த பாலியல் வன்முறைகளும் இதுவரை நடைபெறவில்லை.


 

 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த என்.டி.டி.வி. இயக்குனர் சோனியா சிங் “இரவு நேரத்தில் கடற்கரையில் இளம் பெண்கள் எந்த பயமும், பாலியல் தொந்தரவுகளும் இல்லாமல் தங்கி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழர்களிடம் டெல்லி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.