புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 29 மே 2019 (09:45 IST)

நாடு நாடாக சுற்றியது இதற்குதானா? பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி

மக்களவை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இதில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அவர் வெற்றி பெற்ற போதே பலநாட்டு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து செய்திகளை பறக்கவிட்டு கொண்டிருந்தனர்.

தற்போது வாழ்த்திய உள்ளங்களை வரவேற்கும் விதத்தில் மோடி தனது தனது நண்பர்களான வெளிநாட்டு தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். முக்கியமாக சார்க் அமைப்பில் உள்ள இலங்கை, பூடான், ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளின் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதாக தெரிகிறது. உலகமெங்கும் சுற்றி பல நாடுகளுடன் நட்பை ஏற்படுத்தியதால் பல நாட்டு தலைவர்களும் விழாவில் கலந்து கொள்ள வருவதாக தெரிகிறது. இந்தியாவிலேயே ஒரு பிரதமரின் பதவியேற்பு விழாவிற்கு உலகமெங்கிலும் உள்ள பல தலைவர்கள் வந்து கலந்துகொள்ள போவது இதுவே முதல்முறையாக இருக்கும் என பாஜக வட்டாரங்கள் மகிழ்ச்சியில் உள்ளன.

பல நாட்டு தலைவர்களும், முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு பேரை அழைத்தும் மோடி வென்றதற்கு உடனே வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.