1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (14:34 IST)

ஆண்டுக்கு இருமுறை ஆன்லைனில் தேர்வு? – தேசிய தேர்வு முகமை கடிதம்!

மருத்துவ படிப்பிற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்துவது குறித்து தேசிய தேர்வு முகமை கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவில் நாடு முழுவதும் மருத்துவ பட்ட படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு ஒருமுறை என்ற கணக்கில் நீட் தேர்வு நடந்து வரும் நிலையில், ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்துவது குறித்து தேசிய தேர்வு முகமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில் ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு அதிகமான மன அழுத்தத்தை உருவாக்கும் என்றும், மாணவர்களின் அழுத்தத்தை போக்க நீட் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்தலாம் என்றும், வழக்கம்போல நேரடி தேர்வு நடத்துவது சிரமம் என்பதால் ஆன்லைன் மூலமாக நடத்த பரிசீலிக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது,