செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (19:12 IST)

சௌபாக்ய யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்த மோடி

ஏழை மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் சௌபாக்ய யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.


 

 
டெல்லியில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி சௌபாக்யா திட்டத்தை ஏழை மக்களுக்காக அறிமுகம் செய்ய உள்ளார் என தெரிவித்து இருந்தார்.
 
அதன்படி தற்போது பிரதமர் மோடி சௌபாக்யா திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்தியாவில் 18,000 வீடுகளில் மின்சார வசதி இல்லாமல் இருந்து வந்தது. 
 
பல்வேறு கிராமங்களில் இன்றும் மின்சார வசதி இல்லாமல் உள்ளது. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மோடி அரசு இந்தியாவில் உள்ள் அனைத்து வீடுகளிலும் 1000 நாட்களில் மின்சாரம் வழங்க முடிவு செய்தது.
 
அதன்படி தற்போது 10,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் இலக்கு 2018ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளும் மின்சாரம் வழங்குவது. மேலும் இந்த சௌபாக்ய யோஜனா ஏழை மக்கள் எளிதாக மின்சார வசதி பெற அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இதில் மின்சார இணைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர், மருத்துவ வசதிகள் ஆகியவையும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.500 செலுத்தி மின் இணைப்பை பெற்று கொள்ளலாம். இதற்காக ரூ.16,320 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.